Friday, October 24, 2008

நம்ம கருப்பு

கவலப்படாத -நம்ம கருப்பு இருக்கு!

போய்ப் பாத்துக் கல்பூரம் ஏத்திக் கும்புட்டு வா. '' ஊர், உலகத்தில், உயர்ந்த மதில்களுடன் கோயில்கள், கோபுரங்கள் இருக்கின்றன. ஆயிரம் இருந்தாலும் அம்மாவுக்கு யானைவாரி ஓடைக்கரையில் உள்ள குழுமூர் கருப்புதான். பூசாரித் தாத்தாவுக்குச் சொல்லி அனுப்பி அவரும் வந்து, நானும் போனேன். ``குவார்ட்டர்கூட இல்லாம கும்புடுறானாம், கும்புடு! '' உடைத்து வைத்துச் சூடம் ஏற்றினார். மணியை ஆட்டி, வேண்டிப் பாடினார்.` `ஒம்மா ஒன்ன வளக்க எம்மாம் பாடுபட்டவ தெரியுமா?' 'கருப்புக்குக்கூடத் தெரியாமல் இருக்கலாம். `காத்தாயி'க்குத் தெரியும்! நோய் நொடிகளில் இருந்து பேய் பிசாசுகளிடம் இருந்து காத்தஆயி. இவள் ஓடைக்கரையில் கிடக்கிறாள். அம்மா வீட்டுத் திண்ணையில். என்னோடு நகரத்துக்கு வந்து இருக்கலாம் இந்தக் காத்தாயிகள். வரமாட்டார்கள்! இவர்கள் இராச்சியம் இவர்களுக்கு. மறுப்பவர்களுக்குச் செய்ய முடிகிற மரியாதை : இப்படிப் போய் பார்ப்பதுதான் போலும்..
இன்று ஆயுதத்தைஅனுப்புகிறது - பௌத்தத்தைநேற்றுஇலங்கைக்கு அனுப்பியஇந்தியா
ஓடமுடியவில்லைவிடுதலைக்கு முன்புநம் கடலில்வ.உ.சி.யின் கப்பல்...இன்றுந்தான்-
ஓடமுடியவில்லைவிடுதலைக்குப் பின்பும்நம் கடலில்இந்திய மீனவனின்கப்பல்...
ஒட்டாத அமெரிக்காவும்ரஷ்யாவும் இணைந்தன-கொலைவெறிஹிட்லரைஎதிர்க்க
ஒட்டாதஇந்தியாவும்பாகிஸ்தானும்இணைந்தன -கொலைவெறிமகிந்தாவைஆதரிக்க...
புரியும்போல் இருக்கிறது இந்தியாவின்கொள்கை -நாராயணனுக்கு மட்டும்..

Sunday, June 29, 2008

நல்ல நண்பன் கதை

ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருங்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்,இளைஞ்சனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான், மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதணால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமை பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.இளைஞ்ஞனும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான்.என் நண்பனே. நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. ஆணால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார்.இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன. அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உன்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உன்டாக்கும் வடுவிற்கும், செயல்காளால் உன்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. என் நண்பனே, உண்மையை சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன் வாழ்க்கையில் நீ உயர தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதை காது கொடுத்து கேட்ப்பார்கள். நீ நல்ல நிலமைக்கு வரும் போது உன்னை புகழ்வார்கள். அதையும் இதைய பூர்வமாக செய்வார்கள். அதை தான் நான் இப்போது செய்தேன்,என்னை மன்னித்து விடு, நான் உன்னில் ஏதாவது வடுவை உன்டாக்கி இருந்தால்.

Saturday, June 28, 2008

தேசத்தின் மானம் காத்த மானக்க்ஷாவை மறந்துபோன தலைவர்கள்

தேசத்தின் மானம் காத்த மானக்க்ஷாவை மறந்துபோன தலைவர்கள்

பாகிஸ்தான் போரில் இந்தியாவுக்கு வெற்றித் தேடித் தந்த முன்னாள் ராணுவத் தலைமை தளபதி பீல்டு மார்ஷல் மானக்ஷாவின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி, பிரதமர், வி.ஐ.பி அரசியல்வாதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் வங்கதேச முப்படைத் தளபதிகள் மட்டும் நன்றி மறக்காமல் தங்கள் நாட்டின் விடுதலைக்கு காரணமான மானக்ஷாவுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.


இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 1971ம் ஆண்டு போர் நடந்தபோது இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்தவர் ஜெனரல் மானக்ஷா. இவர் வகுத்த போர் யுத்திகள்தான், பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் சரணடைய வழிவகுத்தது. அப்படி நாட்டையே காப்பாற்றிய ராணுவ தளபதி மானக்ஷா தனது 94 வயதில் நேற்று முன்தினம் இறந்தார்.





நியாயப்படி பார்த்தால் முன்னாள் ஜனாதிபதியோ, பிரதமரோ இறந்தால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைவிட இவருக்கு அதிகமாகவே கொடுத்திருக்க வேண்டும். ஆனால், மானக்ஷாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள் உட்பட எந்த அரசியல் வி.ஐ.பி.க்களும் நேரில் வரவில்லை.





ஏன், நமது நாட்டின் முப்படைத் தளபதிகள் கூட இதில் கலந்து கொள்ளாததுதான் வருத்தம் அளிக்கும் விஷயம்.





தரைப்பட தளபதி ரஷ்யா சென்றுள்ளதால், அவரால் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாததற்கு காரணம் கூறலாம். ஆனால் கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா, விமானப்படை தளபதி மேஜர் ஆகியோர் டெல்லியில்தான் இருந்தனர். அவர்கள் நேரில் வராமல் தங்கள் சார்பில் மலர்வளையம் வைக்க தனக்கு கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளை அனுப்பிவைத்து விட்டனர். ராணுவ இணையமைச்சர் பள்ளம் ராஜூ மட்டும் இந்தியா சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தினார். மற்றவர்கள் சார்பில் மலர்வளையம் மட்டுமே வைக்கப்பட்டது.





வங்கதேச விடுதலைக்கு இந்திய ராணுவ தலைமை தளபதி மானக்ஷா காரணமாக இருந்தார் என்பதற்காக அந்த நாட்டின் முப்படை தளபதிகள் சமீன், அலீம் சித்திக்தி ஆகியோர் நேரில் ஆஜராகி மானக்ஷாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இவர்களின் நன்றி உணர்வு கூட, சொகுசு வாழ்க்கையில் புரளும் நம் நாட்டு வி.ஐ.பி.க்களுக்கு இல்லாமல் போனதுதான் வேதனை. பேருக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டுவிட்டு கண்டுகொள்ளாமல் பலர் இருந்து விட்டனர்.





அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஆட்சியை கவிழாமல் காப்பாத்துவது எப்படி என்ற தீவிர ஆலோசனையில் டெல்லி வி.ஐ.பி அரசியல்வாதிகள் இருந்துவிட்டனர். அவர்களே செல்லாதபோது நாம் ஏன் செல்ல வேண்டும் என மற்றவர்கள் இருந்து விட்டனர்.





இது குறித்து ராணுவ பிரிகேடியர் ஒருவர் கூறுகையில், நாட்டுக்காக போராடிய ஹீரோக்களுக்கு நமது நாட்டில் மதிப்பில்லை. 25 ஆண்டுகளுக்கு முன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற அணியினருக்கு இப்போது விழா கொண்டாடி மதிப்பளிக்கப்படுகிறது. ஆனால் நாட்டை காத்த உண்மையான ஹீரோக்களை போருக்கு பின் மறந்து விட்டார்கள்