Friday, October 9, 2009





சலனம் செய்தாய் என் மனதில்
சாந்தி கண்டேன் அவள் நினைவில்
சேர்ந்தாள் இரண்டற என்கூட
செப்பிவிட்டாள் யானுனதே என்றே
நம்பி யானும் தொடர்ந்தேனே
நம்பு மோசம் புரியாள் என்றே
நடந்ததோ மாற்றம் அறிவீரோ
நம்ப மாட்டீர் சொன்ihல் யான்
துணிந்து செய்தாள் அசை;செயலை
தவிக்கவே விட்டாள் என்னதை;தனியாய்
தாங்கா தென்றே அவள் அறிவாள்
தகும் என்றே நினதை;திட்டாளோ?

என்ன குற்றம் செய்தேன் யான்?
எதற்காய் இத்தண்டனi எனக்கு
எதனும் குற்றம் இருப்பின் அது
என்னi நேசிக்க விட்டதுவொன்றே

காதலது தெய்வீகமாம்
காண்பதெலாம் நின் முகமாம் ஆமாம்
காரிகைகள் இப்படித்தான் சாட்டிடுவார்
காதுகொடுத்து தேற்றிற்றேல் தெரிந்தீர்

அறியா மாந்தரே அறிவீர்
அறமறியாப் பாவையரை நம்பாதீர்
அஃநன்றி நடந்தீரோ தெரிந்தீர்
அன்புப் பிரிவை தாங்க மாட்டீர்


எனை, நீ பிரிந்தாலும்

அழகான கவிதை போன்றது
உன் இதழ்கள்,
வாசிக்கும் வாசகனாக நான்.

புன்ன‌கை பூ பூக்கும்
பூந்தோட்ட‌ம் உன் இதழ்கள்,
தேன் குடிக்கும் வ‌ண்டாக‌ நான்.

இன்னிசை த‌ரும் வீணை
உன் இதழ்கள்,
இத‌ழ் மேவும் கலைஞனாக‌ நான்.

ந‌ம் காத‌ல் யுத்த‌த்தில்
இத‌ழ்க‌ளே போர்க்க‌ளம்,
முத்த‌ங்க‌ளே ஆயுத‌ம்.

உயிர் உண‌ர்ந்த‌ த‌ருண‌ம் அது,
ஓர் அந்திமாலைப் பொழுதில்
காத‌ல் சொன்ன‌ முத‌ல் நொடியும்,
நீ கொடுத்த‌ முத‌ல் முத்த‌மும்.

எனை, நீ பிரிந்தாலும்
என் ஒவ்வொரு இத‌ய‌த்துடிப்பையும்,
உன் நினைவுக‌ளே முத்தமிடுகின்ற‌து.

பகலா இரவா புரியாத காலநிலை
எப்போதுமின்றி
என்வீட்டு மரங்கள் வெறுப்பை தருகிறது
இதயம் விட்டு விட்டு அடிக்கிறது
என்னை அந்தரத்தில்
தவிக்க வைத்து தாலாட்டு கேட்கிறது

சில மணித்தியால சலனங்கள்
தொ¤ந்தும் ஏன் இப்படி தவிக்கிறது மனம்

ஆசையாய் உன்னை முத்தமிட முடியாது
அன்பாய் உன்னை வருட முடியாது
காதலாய் உன்னை அணைக்கவும் முடியாது
ஆயிரம் தடைகள் சம்பிரதாயங்கள்

அவனுக்கும் இப்படித்தான் இருக்குமா
இருக்க வேண்டுமென்கிறது மனம் ஆசையாக

என் உணர்வுகளே உங்களுக்கு !
மதிக்கத்தான் நினைக்கிறேன் முடிவதில்லை
எப்போதும்
அறிவாக நினைத்தால் சி£¤ப்புத்தான் வருகிறது
அறிவாக நினைக்க மனம் அனுமதிக்கப்
போவதுமில்லை இப்போ.
காதலே ! திரும்பத்திரும்ப உனது அடிமையாக
இன்னும் எத்தனை காலம்தான் நான்..

வயது வரம்புகள்
எப்போ எங்கு யாருடன் என்றெல்லாம்
பார்க்காது
வினோதமான உறவுகளை எப்போதும்
விதைத்த படி நீ.
உதறிவிட்டு போனாலும் தொடர்கிறாய்
என்னுடனே
கொன்றுவிட்டு வாழவும் முடிவதில்லை என்னால்

என்ன செய்ய காதலே உன்னை என்ன

கண்ணீர்.. கவிதை..காதலின் சறுக்கல்


01.
கண்ணீர்
-------------

எனது இதயத்தின் இடுக்குகளிலே
கண்ணீரின் பாசி படிந்துள்ளதால்
என் இதயத்தினுள் வர நினைப்பவர்கள்
கவனம் பாசியில் வழுக்கி விழுந்துவிடுவீர்கள்

சற்று தள்ளி நின்று எட்டிப்பாருங்கள்
அங்கே நைல் நதியாய் என் கண்ணீரும்
எவெரெஸ்ட் சிகரமாய் என் பெரு மூச்சும்
மனதில் பாரமாய் இமய மலைச்சாரல்கள்

என் இதயத்தின் இரத்த குழாய்களில்
கண்ணீர்த்துளிகளும் இரத்தமும்
போட்டி போட்டு மரதன் ஓட்டம் ஓடுகிறது
யார் இறுதியில் மரணப் பரிசை பெறுவது என்று

பரவாயில்லை என் கண் மட்டும்
இன்னும் உறங்கவில்லை ஏனென்றால்
அது வற்றாத கண்ணீரைச் சிந்தும்
நயாகரா நீர் வீழ்ச்சியாகிட்டே....



02.
கவிதை
------------

காதலித்தால் கவிதை வருமாம்
உண்மையோ நானறியேன்
ஒன்று மட்டும் சொல்வேன் நான்
க(னவு) விதை என்று

காதலனும் காதலில் தோற்றவனும்
புதிய, பழைய கனவுகளை மீட்க
பண்படுத்திய இதய மண்ணிலே
விதைக்கின்ற விதைகள்தான் இது

சில வேளை அழகு என்ற கறையானும்
வசதி என்ற எறும்புகளும்
குடும்பம் என்ற நத்தையும்
க(னவு)விதைகளை நாசம் செய்யும்

அப்போதே விடடுக்கொடுக்க தயாராக
உங்கள் கைகளிலே ஏந்துங்கள்
நீங்கள் கனவுலகில் பெற்றெடுத்த உங்கள்
அன்புக் குழந்தையை மட்டும்

அது மட்டுமே உங்களுக்கு சொந்தம்
மற்றதெல்லாம் மாறிவிடும்
சந்தர்ப்ப சூழ்நிலை என்ற
வெள்ளப் பெருக்கினால்....



03.
காதலின் சறுக்கல்..
-------------------------

வெண்மையான உடலுக்குள்ளே
உண்மையை மறைத்து
ஆண்மையை ஏமாற்றும்
திறமை அது பெண்மை.

இனிக்க இனிக்க பேசி
பின் கண் சிவக்க சிவக்க அழுது
உன் நாசி வழியே நீர் வடிய
உன்னை அழ வைப்பதும் பெண்மை.

உந்தன் மனதினை மாற்றி
அதன் கோலத்தை குறைத்து பின்
இவ் அகிலத்தையே ஏமாற்றும்
ஒரு விச ஜந்து பெண்மை.

ஒரு தடவை மனிதனும் ஏமாந்தான்
இக் காதல் என்ற பெண்மையில்
அதனால்தான் வாழ்க்கைப் பாதையில்
சற்று சறுக்கி பின் எழுந்து விட்டான்.

சற்று உற்றுப்பாருங்கள் அவனை
தெரிகின்றதா காதல் வடு அவன் கண்ணில்
தெரியாது... அது தெரியாது....
அது கரைந்து போனது அவன் இதயத்தினுள்ளே..

யாரும் அழவேண்டாம் இனிமேல்
ஏன் தெரியுமா எமக்காகத்தானே
அந்த வானம் அழுகிறது அதோடு
அவனும் அழுகிறான்.

அழுது முடித்து விட்டான்
ஆனால் அவன் கண்கள் மட்டும்
அடம் பிடிக்கிறது இமை மூட
பரவாயில்லை பார்க்கலாம் நாளை..

மன்னியுங்கள்.. உங்களையும்
இந்த பெண்மையையும்
அழ வைத்ததற்கு
சென்று வருகிறேன் நான்....

இது தான் காதலோ?
---------------------------

உனக்கும் எனக்கும்
இடைப்பட்ட பொழுதுகள்
எப்போதும் அழகாய் விடிகின்றன
கவிதையாய்

கோவப்படுகையில்
நீ அடிப்பாய்
வலிப்பதில்லை – இன்றோ
மெளனம் காக்கிறாய்
வலிக்கிறதே

ஒத்த கருத்தோடும்
சிந்தனையோடும்
மாற்றுக் கருத்தில்லா
மாணிக்கங்களாய் மிளிர
நாமென்ன
கொள்கைக்காய் கை கோர்த்தவரா?

குடும்பச் சமையலில்
குழப்பங்கள் தானே குழம்பு
ஊடல்கள் தானே உப்பு

உன்னை நான் அனுசரிக்க
என்னை நீ தினம் சகிக்க
முரண்பட்ட கருத்துகள்
முதிர்வடையும் வரை
நிலாவொளியில் கதை பேசி
முடிவெடுக்காமலேயே
தூங்கிப்போவோமே
இது தான் காதலோ?



Saturday, October 3, 2009

சாமி..

எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமி ஆடுவாள்
அம்மா ஏனோ தெரியவில்லை
அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம்.

போர்..

ஊரில் உங்கள் சுடுகாடு.
சுடுகாட்டில் எங்கள் ஊர்.

மானம்..

உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?
அவன் கைகளை வெட்டு
கெஞ்சி கோவணம் கட்டாதே
அம்மணமாகவே போராடு.
மந்தை..

மேடை தமிழா!
ஆடாய் மாடாய்
ஆனாயடா… நீ என்றேன்
கைதட்டினான்
உறுத்தல்..

இரவெல்லாம் விழித்திருந்து
எங்களுர் ஆச்சி இழைத்தபனைபபாய்…
வாங்கினேன் உறங்குவது எப்படி
இவள் பாயில்?

மனிதன்..

இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்
இப்படியாக மனிதன்….

முரண்..

இறைவனின் வாகனம் என்றான் நாயை
அவதாரம் என்றான் பன்றியை
இறைவனே என்றான் குரங்கை
இவனே திட்டினான் என்னை
நாயே! பன்றியே! குரங்கே!

நாற்காலி..

இங்கே வேறுபாடு அதிகம் இல்லை
நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி

ஞானம்..

ஞானம் பெற்றது
நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால்
நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.
வில்..

வீழ்ந்த தமிழன் கதையை
விம்மி விம்மி பாடிக்கொண்டிருக்கிறது
மேடையில்-
வெட்கம் கெட்ட வில்
உங்களுக்கு இலக்கியமாக்கித் தர
என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது.
நாவல் வடிவம் அதற்கு நீளம்.
சிறுகதையில் மிகவும் சுருங்கும்.
கவிதையென்றால் பொய் சேரும்.

எழுதினாலே இயல்பு மாறக்கூடும்.

உங்களுக்கு இலக்கியமாக்கித் தர
என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது.
எழுத்தில் சிதைக்காமல்
நினைவிலிருந்தே வாசித்துக்கொள்ள வழியிருக்கிறதா?

*
பாதிக்கனவுடன்
கலைந்துவிட்ட உறக்கத்தை
மீதிக்கனவுக்காக இழுத்துப்போனேன்.
விழித்தபோது கிடைத்திருந்தது
புதிதாய் இன்னொரு பாதிக்கனவு.
தலைகோதி
கரம்பற்றி
துணையாக நானிருக்க,
நீ ஈனும் குழந்தையுடன்
மீண்டும் பிறக்கின்றன…
முத்தமிட்டு
தோள் சாய்ந்து
நீ பார்க்க,
நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்
நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!

*

இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!

*

குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!

*

உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!

*

எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்