
அன்பே உன் நினைவு நெஞ்சை
வாளாய் அறுக்குது- நீ
அடிக்கடி காட்டிய உன்
ஆசைப் பார்வைகள் என்னை
ஆர்த்துச் சிரிக்குது.....
நெஞ்சமெலாம் ஆசைக்கனா
விரிந்து கிடக்குது
வஞ்சகனாய் உன்னை எண்ண
மனமும் மறுக்குது
விழியிமைத்து நினைவு கொள்ள
வீழ்ச்சி உறுத்துது
மன்னன் உந்தன் அன்பு மனம்
பணத்தில் சரியுது.....
எந்தன் பாசம் உன் மனதில்
வேஷம் ஆனதா?
என் கனவு பாஷையெல்லாம்
மௌனச் சிறையிலா?
தாபங்களும் இனி எனக்குத்
தனிமையானதா?
சோகங்களே பெண்களுக்கு
முடிவு சொல்வதா.....???
தோல்விகளின் இருப்பிடமாய்
நானும் ஆவதா?
வீழ்ச்சிகளே நிரந்தரமாய்ச்
சூட்டிக் கொள்வதா?
ஆண்கள் மனக் கற்பனையில்
பெண்மை கேலியா?
நாளைகளின் விலங்குகளில் என்
மனிதம் தோல்வியா.......?????
No comments:
Post a Comment