உன்னை நேசித்தேன்
எந்த ஊரில்
இருந்தாலென்ன...
என் கவிதையை நீ
தொட்டவுடன்
சிலிர்க்கும் எனக்கு!
எழுத்துக்களைப்
பார்க்கிறாய் நீ.
இந்த
எழுத்துக்களின் வழியே
உன்னை
எட்டிப் பார்க்கிறேன் நான்!
காற்று உன் வீட்டுக்
கதவுகளை
அசைக்கும்போதெல்லாம்
நினைவுபடுத்திக் கொள்...
உன் இதயத்தை
அசைக்க நான்
எடுத்த முயற்சிகளை!
ஒவ்வொரு தடவையும்
நீ பார்த்த
பார்வைகளைத்
தொகுத்து வைத்திருக்கிறேன்
ஆல்பமாக.
அர்த்தம் சொல்லத்தான்
அகராதி கிடைக்கவில்லை...
காதலியே நீ புரிந்திடு.. காதல் என்ற போர்வையில்
பெண்கள் பின் அலைவது தான்
எனது பொழுது போக்கல்ல
பார்த்த விநாடியில் பத்திக் கொள்ள
என் காதல் பெற்றோல் காதல் அல்ல
வந்ததும் தெரியாமல்
போனதும் புரியாமல் விட
இது மின்னல் காதலுமல்ல
பலநாட் பழகி ஒருவரையொருவர்
புரிந்து கொண்ட நம்காதல்
புனிதமான உண்மைக்காதல்…
கண்ணே மணியே முத்தே என்ற
வார்த்தைகளில்தான் காதல் இருக்கிறதா?
தங்கம் வைரம் வைடூரியம் என்ற
பணம்கொடுத்து வாங்கும் பொருளில்தான்
காதல் இருக்கின்றதா?
ஆம் எனில் அன்புக்காதலியே
என் காதலுக்கு இது தெரியாது
என்காதல் அழகான அன்புக்காதல்
நித்தமும் உன்
நினைவுகளால் உண்டாகும்
சொல்ல தெரியாத என்
சோகங்கள் எல்லாம்
உரு மாறுகின்றன
கண்ணீராய் பாதியும்
கவிதையாய் மீதியும் ...!
என் கண்ணீருக்குத்தான்
எத்தனை வெட்கம் பாரேன்...
நீ விலகிச் சென்ற பிறகுதான்
அது
வெளியே எட்டிப் பார்க்கிறது!
வானத்தை நேசித்தேன்
தொட முடியவில்லை!
கடலை நேசித்தேன்
தாண்ட முடியவில்லை!
காற்றை நேசித்தேன்
பிடிக்க முடியவில்லை!
அன்பே
உன்னை நேசித்தேன்
மறக்க முடியவில்லை...!
வானிலிருந்து தான்
தேவதைகள் வருகிறார்கள் என
நம்பி கொண்டிருந்த மக்களுக்கு
நீதான் நிரூபித்து கொண்டிருக்கிறாய்
பூமியிலும் தேவதைகள் வாழ்வதை...!
நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்.
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது!
கடவுளுக்கு படைக்க வைத்திருந்ததை
பசி தாளாமல் அள்ளித் தின்ற
பச்சை குழந்தையாய் –
உன்னிடம்
என் காதலை சொல்லிவிட்டு நிற்கிறேன்!
நீ என்னை தண்டிக்கப் போகிறாயா?
ஆசீர்வதிக்கப் போகிறாயா
Friday, November 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment