Friday, November 20, 2009

செல்ல காகமே












எத்தனை முறை
கொத்தினாலும் தீராத
கனி தான் காதல்...
கோடி மீன்கள் குடித்ததனால்
குறைவு படுமா கடல் ?
உன்னைப் பிடிக்கவே
இல்லை போடா என
சொல்கிறாய் என்னை
இறுக்கிப் பிடித்துக்கொண்டே



நான் கெஞ்ச கெஞ்ச உனக்கு
அதன் மதிப்பு தெரியவில்லை..
இனி உன்னைக்
கெஞ்சப்போவதில்லை..
தூக்கிக் கொஞ்சப்போகிறேன்..
அப்போது தெரியும்
இப்படிக் கொஞ்சிக் கொஞ்சியே
இன்னும் என்னவெல்லாம்
கொள்ளையடிக்கப்
போகிறாயோ எனக் கேட்கிறாய்...
உன்னிடம் கொள்ளையடிக்க
என்னடி இருக்கிறது உன்
அழகான வெட்கங்களைத்தவிர....?



எப்போது சண்டையிட்டாலும்
அழகாகத்தான் இருக்கிறாய்...
ஆனால் நீ எனக்குத்தான் என
சொல்லி சண்டையிடும் போது
மேலும் மேலும் அழகாக
இருக்கிறாய் செல்ல காகமே....
நினைத்து நினைத்து
ஒவ்வொன்றாகச்சொல்லி
சலிக்காமல்
எப்படி உன்னால் மட்டும்
சண்டையிட முடிகிறது....?
இவ்வளவு நினைவுகளையும்
சுமந்து நிற்கும்
உன் மனதுக்கு
பல*முத்தங்களைப்
பரிசாக*த் தருகிறேன்
என்றாலும் முறைக்கிறாய்

என்னடி செய்ய நான்..?
எனக்கு ஒரு சந்தேகம் செல்லம்
உன்னை விதம் விதமாக
கொஞ்சவேண்டும் என்றுதானே
என்னிடம் விதவிதமான
காரணங்களோடு
சண்டையிடுகிறாய்..?

1 comment:

Anonymous said...

your love poems are excellent. however you try to write social reform poems also .good.